ஒவ்வாமையால் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

அதுருகிரியவில் ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி

ஹோமாகம, முல்லேகம பகுதியைச் சேர்ந்த தினிதி திமாரா என்ற பதினான்கு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி நேற்று (18) தோழி ஒருவருடன் மாடியில் படித்துக் கொண்டிருந்த போது கை வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளார்.

பின்னர் திடீரென வாந்தி எடுத்து தரையில் விழுந்த அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒருவெல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.