பாடசாலைக்கு சென்ற ஆசிரியருக்கு வழியில் நிகழ்ந்த கொடுமை!

தினியாவல பிரதேசத்தில் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் அவரது தங்க மாலையை பறிக்க முற்பட்ட போது ஆசிரியை தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் வழியில் இனந்தெரியாத இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வீதி வழியால் ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் அவரது தங்க மாலையை பறிக்க முற்பட்ட போது ஆசிரியர் அவரது நகையை கையில் எடுத்து கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், ஆசிரியர் சமயோசிதமாக செயற்பாட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினர்.