கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

6 நவீன கிரேன்களின் உதவியுடன் கொள்கலன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதன் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு முனையத்தின் 80% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் நிர்மாணச் செலவு 825 மில்லியன் ரூபாவாகும். கிழக்கு முனையத்தின் கொள்கலன் இயக்க திறன் வருடாந்தம் 20 இலட்சம் என செயலாளர் தெரிவித்துள்ளார்.