VAT தொடர்பில் விவாதிக்க பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானதும், சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்த எதிர்க்கட்சிகள் முன்வைத்த எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.

குறித்த வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குறித்த வாக்கெடுப்பில் ஒருவர் வாக்களிக்கவில்லை.