‘ஹஷிஸ்’ போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

வத்தளை பிரதேசத்தில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 35 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 20 மில்லியன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.