சுற்றுலாத் தலங்களில் இலங்கை முன்னணி!

உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

‘ஃப்ளாஷ் பேக்’ பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி ‘ஃபோர்ப்ஸ்’ என்ற வணிக இதழ் தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக சுற்றுலாத் தல பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

ஜப்பான், அர்ஜென்டினா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

பல கடினமான வருடங்களுக்குப் பிறகு இலங்கை தற்போது சுற்றுலாத் துறையில் முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று அந்த இணையத்தளத்தில் இலங்கை பற்றிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டில் 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.