மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பின!

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (16) அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நானுஓயாவிலிருந்து நேற்று (15) கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட புகையிரதம் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் தடம் புரண்டதால் நேற்று (15) மாலை 3 மணி முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வருகை தந்த பயணிகள் தலவாக்கலை புகையிரத நிலையத்திலிருந்து பேரூந்துகள் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதனால் தைப்பொங்கல் தினத்திற்காகவும் விடுமுறை கழிப்பதற்காகவும் மலையக பகுதிகளுக்கு வருகை தந்திருந்த புகையிரத பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.