இன்றைய தங்க நிலவரம்!

அதேவேளை வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.40க்கும் ஒரு கிலோ ரூ.77,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

2024ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிற நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் தங்கவிலை குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் நேற்று (ஜனவரி 16) தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 17ஆம் தேதி கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,810க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து கிராம் ரூ.4,759க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ஒரு சவரன் ரூ.38,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
அதேவேளை வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.40க்கும் ஒரு கிலோ ரூ.77,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.