தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி!

கடந்த (2023) ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேங்காய் உற்பத்தி 1988.3 மில்லியன் தேங்காய்கள் ஆகும்.

இதன்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 151.3 மில்லியன் தேங்காய்களாக குறைந்துள்ளது.

வீழ்ச்சிக்கான காரணம்
இந்த நாட்களில் தேங்காய் ஒன்றின் விலை 150,160 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

வண்டுகள், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பும் தென்னை உற்பத்தி குறைவதற்கு காரணமாக உள்ளதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.