கொழும்பு ரயில் நிலையத்தில் திடீர் மின் துண்டிப்பு!

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று முதல் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.   

அங்கு குப்பி விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதிகாரிகள் ரயில் இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மின்வெட்டு காரணமாக, ஒலிபெருக்கி மூலம், ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படுவதில்லை. டிக்கெட் வழங்குவதும் குப்பி விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மின் தடை

மின் தடையால் ரயில் பயணிகளும் இருளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் வீதி விளக்குகள் எரியும் இடங்களுக்கு சென்று ரயில் வரும் வரை காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சார கட்டணம் 8 லட்சம் ரூபாவுக்கு மேல் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மின் கட்டணம்

கடந்த 24ஆம் திகதி ரயில் திணைக்களத்தினால் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காசோலை வழங்கப்பட்டது. ஆனால் அன்று பிற்பகல் முதல் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.