தென்னிந்திய பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டருக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

பிரபல தென்னிந்திய திரையுலக பிரபலம் நடன கலைஞர் கலா மாஸ்டர் இறந்துவிட்டதாக கண்னீர் அஞ்சலி போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நேற்றையதினம் தென்னிந்திய திரை இசை பின்னனி பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம், முற்றவெளியில் நடைபெற்றது.

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி
நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இடையில் மக்கள், தடைகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி ஓடியதால் அமைதி இன்மை ஏற்பட்டதை அடுத்து , சிறிது நேரத்தின் பின்னர், ஒரு மணித்தியாலத்தில் நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று காலை நடன கலைஞர் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியில் காட்சி படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.