கரட் விலையில் வீழ்ச்சி!

கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும் தற்பொழுது சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், 5 கிலோ கிராம் எடையுடைய கீரி சம்பா பொதியொன்றின் விலை 1800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மரக்கறி வகைகளின் விற்பனை வீழ்ச்சி

ஒரு கிலோ கிராம் நாடு அரிசி 96 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 90 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சிகப்பு பச்சை அரிசி 170 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் போஞ்சி 800 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 350 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கோவா மற்றும் பீரட்ரூட் ஆகியன 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகற்காய், புடலங்காய் போன்றன ஒரு கிலோ 350 முதல் 400 ரூபாவிற்கும் வட்டக்காய் ஒரு கிலோ 300 முதல் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், கடந்த காலங்களில் இந்த மரக்கறி வகைகளின் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.