நாடாளுமன்றிற்கு வரமாட்டேன்கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த மாதத்துக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இந்த மாதத்துக்கான முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள்

இந்த நிலையில், இலங்கைக்கு தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை முன்னாள் சுகாதார அமைச்சர் நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளதோடு, சுகவீனம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, அவரது செயலாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, முன்னாள் சுகாதார அமைச்சர் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.