சட்டவிரோத பீடி இலைகளுடன் ஒருவர் கைது!

கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நேற்றைய தினம் (03) சிறிலங்கா கடற்படையினரால் கற்பிட்டி இலந்தடிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய நுரோச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

விசேட தேடுதல் நடவடிக்கை

இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடம் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் சுமார் 3440 கிலோ பீடி இலைகளும் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் சட்டவிரோதமான பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கடற்படையினர் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக சட்ட நடவடிக்கை

அதன் அடிப்படையில், வடமேற்கு கடற்படையின் கட்டளைத் தளபதி விஜயா தலைமையில் நேற்றைய தினம் (03) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி இலந்தடிய கடற்கரைப் பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து 111 பொதிகள் கைப்பற்றப்பட்டன, அந்தப்பொதிகள் சோதனைக்குற்படுத்தப்பட்ட போது அதில் பீடியிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது, அதன் எடை தோராயமாக 3440 கிலோவாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்கவிலுள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.