முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள

அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை அழகாக வைத்திருப்பதற்கு பல வேலைகளை செய்கின்றனர். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு முகத்தை பொலிவாக வைத்திருப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

முகப்பொலிவு

தோல் வறண்டு அசிங்கமாக இருந்தால் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் குறைவாக இருப்பது தான் காரணம். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பல்வேறு பழங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது எனவே நாம் பழங்களை அதிகம் உண்ண வேண்டும்.

இதை தவிர பாதாம், பிஸ்தா, முந்திரி, எள்ளு, ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். உடல் உஷ்ணத்தை அதிகரிக்க கூடிய உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும். இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும். மதிய உணவில் எப்போதும் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும்.

தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் எண்ணெய் தேய்த்துக்கொள்வது நல்லது. இந்த எண்ணெய் தேய்ததன் பின்னர் அரை மணி நேரத்தின் பின்னர் முகம் கழுவினால் முகம் அழகாக இருக்கும்.

அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு, 3 அல்லது 5 துளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். இதை முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும்.