நாட்டு மக்களுக்கான அவசர எச்சரிக்கை!

இந்த வருடத்தில் இதுவரை 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23,731 டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பு மாவட்டத்தில் 5,057 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2,214 பேரும், களுத்துறையில் 1,244 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,879 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த மாதத்தில் இதுவரை 1,458 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.