ஜனாதிபதி வீட்டிற்கு தீ வைத்த நபர் கைது!

   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான் ஆசிரியர் ஒருவர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 36 வயதான ஆசிரியர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.​​

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரவு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த போராட்டக்குழுவினர் அவரது சொத்துக்களைத் தாக்கி தீயிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு திமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.