மாணவியின் உள்ளாடையை திருடிய நபர்

 மாணவியின் உள்ளாடையை திருடிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழகம், கோவையை சேர்ந்தவர் முருகன் (வயது 54), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மாணவியிடம் ஆபாச பேச்சு

இந்நிலையில் அவருக்கு எம்.எஸ்சி. படித்து வரும் 24 வயதான கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நன்றாக பேசி வந்த முருகன், நாட்கள் செல்லச் செல்ல மாணவியிடம் ஆபாசமாக பேசிதாக தெரிகிறது.

இதனையடுத்து மாணவி, முருகனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். எனினும் மாணவி வீட்டை விட்டு வெளியே வரும் போது முருகன் ஆபாசமாக பேசுவது, சைகை காட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார்.

மாணவி கண்டித்தபோதும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மாணவி, அது தொடர்பில் தனது பெற்றோரிடம் கூறினார்.

சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து கொடுத்த முறைப்பாட்டின் பேரில் ஆர்.எஸ்.புரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் முருகன், அடிக்கடி குடித்து விட்டு மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்ததோடு , மாணவியின் உள்ளாடைகளை திருடி துண்டு துண்டாக வெட்டி வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.