வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை ! நாளை முதல் நிலைமை மோசமாகும் !

நாளை (30) முதல் நாடு முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், நாளை மறுநாள் மேலும் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.