சுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா தடுப்பூசி!

சுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நேற்று அனுமதியளித்துள்ளது.

ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள், குறித்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அங்கீகாரம் வழங்கிய சில வாரங்களின் பின்னர் இந்த அனுமதியை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.

Advertisement

இந்நிலையில், தற்பொழுது மொடர்னா தடுப்பூசியையும் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.