கோவிட் தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 16 ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரை

கோவிட் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகளாகப் பயன்படுத்த 16 ஆயுர்வேத மருந்துகள் இதுவரை அங்கீகரிக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், ‘சுவ தரணி’ உட்பட இரண்டு மருந்துகள் ஆயுர்வேத துறையால் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, 100 ஆயுர்வேத குறிப்புகள், பல இடங்களில் இருந்தும் அனுப்பப்பட்டன.கடைசியாக, கோவிட் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இத்தகைய 14 மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் இயற்கையான மருந்துகள், பக்கவிளைவுகளால் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள், எவரும் எந்த பயமும் சந்தேகமும் இல்லாமல் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மருந்துகளை பிராந்திய ஆயுர்வேத அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

Previous articleயாழ்.ஆணைக்கோட்டை – முள்ளியில் வாள்களுடன் இரு ரவுடிகள் கைது!
Next articleவவுனியாவில் கர்ப்பிணி மனைவியை பார்வையிட வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கோவிட் தொற்றாளர்!