வவுனியாவில் கர்ப்பிணி மனைவியை பார்வையிட வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கோவிட் தொற்றாளர்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 வயதுடைய கோவிட் தொற்றாளர் இன்று வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

நெளுக்குளம் – சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வந்த நிலையில் குறித்த நபர் கோவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து, வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக காணப்படுகின்றார்.

இந்நிலையிலேயே குறித்த கோவிட் தொற்றாளர் மதியம் மனைவியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் மனைவி அவரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து ஒப்படைத்துள்ளார்.

மனைவியை விட்டு பிரிந்து வாழ முடியாத நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

Previous articleகோவிட் தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 16 ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரை
Next article38 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்திய கொரோனா நிலவரம்!