வவுனியாவில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று : மக்களே அவதானம்!!

வவுனியாவில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று(14.08.2021) வெளியாகின.

அதில் சமயபுரம் பகுதியில் இருவருக்கும், மூன்றுமுறிப்பு இராணுவ முகாமில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் ஒருவருக்கும், தேக்கவத்தைப் பகுதியில் இருவருக்கும், வீரபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

Advertisement

சின்னசிப்பிக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், ஒமந்தைப் பகுதியில் பதின்னான்கு பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் இருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் மூன்று பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும்,

பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், புகையிரத திணைக்கள விடுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் பன்னிரண்டு பேருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும்,

சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் ஒருவருக்கும், சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சோயாலேன் பகுதியில் ஒருவருக்கும்,

வெளிக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், கோவில்புதுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தந்திரிமலை பகுதியில் ஒருவருக்கும், அம்பலாங்கொட பகுதியில் ஒருவருக்கும்,

தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், தம்பனைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாசிலாம்பலாங்கொட பகுதியில் ஒருவருக்கும என 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.