நடுரோட்டில் பெண் டிராபிக் பொலிஸின் மோசமான செயல்; குவியும் கண்டனங்கள்!

நடுரோட்டில் பெண் டிராபிக் பொலிஸ் ஒருவர் இளைஞர் ஒருவரை மோசமாக நடத்திய சம்பவம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள ஸ்ரீமார் சாலை சந்திப்பில் டிராஃபிக் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பெண் பொலிசார் ஒருவர் இளைஞர் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்டது வீடியோவாக வெளியாகி விமர்சனங்களை சந்தித்துள்ளது.

டிராஃபிக்கை அந்த பெண் போலீஸ் அதிகாரி சரி செய்து கொண்டு இருக்கும் போது அவரின் மீது சேறு பட்டுள்ளது. அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரால் இவ்வாறு சேறு பட்டுள்ளது.

அந்த பெண் பொலிஸின் வெள்ளை நிற பேண்ட் சேறுபட்டதால் கோபம் அடைந்த அந்த பெண் பொலிஸ் ஓடிப்போய் அந்த பைக்கை மறித்து நிறுத்தினார். எனினும் அந்த நபர்தான் அந்த பெண் போலீஸ் அதிகாரி மீது சேறை இறைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பலருக்கு முன்னில் அந்த நபரை மோசமான வார்த்தைகளால் திட்டிய அப்பெண் அதிகாரி, தன்னுடைய பேண்ட் காலை சுத்தம் செய் என்று கூறியுள்ளார். இதனால் அவமானத்தில் கூனிக்குறுய அந்த இளைஞர் எல்லோருக்கும் முன்னிலையில் பெண் அதிகாரியின் பேண்டை துடைத்து இருக்கிறார்.

அந்த பெண் பொலிஸ் அதிகாரியின் பேண்டை இளைஞர் சுத்தமாக துடைத்த பின்பும் ஆத்திரம் குறையாத அவர், கடைசியாக அந்த இளைஞருக்கு பொளேர் என்று அறைந்துவிட்டு அங்கிருந்து நகரத்து சென்று இருக்கிறார்.

இந்நிலையில் அவமானத்தில் அந்த இளைஞர் கூனிக்குறுகி நிற்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ள நிலையில், பெண் பொலிஸின் செயலுக்கு கடும் கண்டனக்கள் வெளியாகியுள்ளது.