மட்டக்களப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று நெல்லிக்காடு கிராமத்தில் விவசாய காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று கூழாவடி நெல்லிக் காடு கிராமத்தைச் சேர்ந்த 65வயதுடைய நான்கு பிள்ளைகள் தந்தையான அழகிப்போடி- தங்கராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் (12) மாலை வீட்டிலிருந்து வெளியில் போன குடும்பஸ்தர் வீட்டுக்கு வராத காரணத்தினால் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை குறித்த நபர் அவருடைய விவசாய காணியில் விவசாயத்துக்கு பாவிக்கும் கிருமி நாசினி போத்தல் அருகாமையில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து வெல்லாவெளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Previous articleயாழ். கல்வியங்காடு பகுதியில் மேந்கொள்ளப்பட்ட தங்கநகை திருட்டு
Next articleரணில் பிரதமர் ஆனதற்கு பட்டாசு வெடித்து வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு ஆதரவாளர்கள்