நான் ஜனாதிபதியை நீராட்டியதில்லை ஞானா அக்கா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

நான் எந்தவொரு அரசியல்வாதிகளிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. அரசியல் விடயங்கள் மாத்திரமல்லாது நாட்டை ஆட்சி செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) தான் ஆலோசனை வழங்கி வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானாக்கா (Gnana Akka) என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய என்ற பெண் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை வாராந்த பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் இராணுவ அனுசரணையின் அடிப்படையில் எனக்கு பிரதிபலன்கள் கிடைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை. நான் உருவாக்கிய அனைத்தும் நான் வியர்வை சிந்தி சம்பாதித்தவை. தற்போது அவை கொள்ளையிடப்பட்டு தீயில் அழிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் குடும்பத்தினர் எனது ஆலய வளவை சுத்தம் செய்வதாகவும் ஜனாதிபதியை நான் நீராட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை மறுக்கின்றேன்.

எப்போதும் நான் ஜனாதிபதியை நீராட்டியதில்லை. எனது வழிபாட்டு இடத்தில் அப்படியான இடம் எதுவுமில்லை எனக் கூறியுள்ளார்.

அத்துடன் தான் வேறு ஒரு நபர், தான் தெய்வமில்லை எனவும் மன ரீதியான சக்தி தெய்வத்திற்கு வருகிறதே அன்றி தனக்கு அல்ல எனவும் தெய்வத்தின் அறையில் இருக்கும் போது தனக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் பின்னர் தனக்கு நினைவில் இருப்பதில்லை எனவும் ஞானக்கா தெரிவித்துள்ளார்.

Previous articleதனியார் வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவன் மாயம்
Next articleஜூன் மாதம் இடம்பெற்ப்போகும் பெரிய கலவரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை