மட்டக்களப்பில் எரிபொருள் இன்மையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலிருந்து எரிபொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் வண்டியை மறித்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சிறு தொகை மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாகக் குறித்த போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட காட்சிப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் தங்களது கடமைகளைச் செய்யும்போது பெண்கள் மீது கை வைக்க முடியாது என்பது குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்குத் தெரியாமல் போனது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Previous articleயாழில் இடம்பெற்ற விபத்து : படுகாயமடைந்த இரு பெண்கள்!
Next articleசுற்றாடல் விஞ்ஞான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்