பெட்ரோல் டேங்கை சைக்கிளில் கொண்டு வந்து எரிபொருள் பெற்ற இளைஞர்!

அனுராதபுரம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், பெட்ரோல் டேங்கை தனியாக சைக்கிளில் எடுத்துக் கொண்டு பெட்ரோலை வாங்கி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்கு பெற்றோல் இன்மையால் குறித்த இளைஞர் இவ்வாறு சைக்கிளில் பெட்ரோல் டேங்கை தனியாக எடுத்து வந்து பெற்றோல் வாங்கி சென்றுள்ளார்.

நாட்டில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பேருந்துகளின் சேவை கணிசமாக குறைந்தது. எரிபொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் தொடர்கிறது.

இதே நிலை நீடித்தால் பேருந்துகளின் சேவைகள் மேலும் குறைக்க நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு உள்ளேயும், மாகாணங்களுக்கு இடையேயும் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே,

Previous articleயாழில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!
Next articleஇலங்கை மக்களுக்கு வெளிவந்த மற்றுமொறு அதிர்ச்சித் தகவல்!