ஆர்ப்பாட்டத்தில் ராணுவ அதிகாரியின் துப்பாக்கியை திருடிய பொதுமக்கள்!

நேற்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருாணுவ அதிகாரி ஒருவரின் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருட்டுச்சம்பம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஜனாதிபதி பதவியில் இருந்து விலகாத கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கை!
Next articleயாழில் மீண்டும் அதிகரிக்கும் கொராணா தொற்று : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!