மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு – சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர்கள் ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேளையில் முச்சக்கர வண்டியை கடக்கமுற்பட்டபோது இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து முச்சக்கர வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதுப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பஸ்தர் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!
Next articleஎரிபொருளின் விலை குறைக்கப்படும் ! மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட எரிசக்தி அமைச்சர்!