திருகோணமலையில் மின்வெட்டு நேரத்தில் இடம்பெற்ற பயங்கரம் : குடும்பஸ்த்தர் ஒருவர் பலி!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான சோமசுந்தரம் சிறிகந்தராசா (வயது 50) என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சிறிகந்தராசாவின் வீட்டுக்கு சந்தேக நபர் வந்து அவரை வெளியே வருமாறு கூறி கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அறம்துறை கிருபாகரன் (வயது 47) என்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleமாயமான பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!
Next articleலிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!