கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் லாஸ்லியா கவர்ச்சியான உடையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது 6வது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்து பல பிரபலமானவர்கள் உள்ளனர்.

முதல் சீசனில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியாவும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் திருமணம் சமீபத்தில் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது.

நடிகை லாஸ்லியா தனது தோழிகளுடன் கவர்ச்சி உடையில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். லாஸ்லியா கவர்ச்சியாக உடையணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Previous articleயாழ்.போதனா வைத்தியசாலை விடுத்த முக்கிய அறிவிப்பு !
Next articleயாழ். ரயில் மோதி இளைஞனுக்கு நேர்ந்த துயரம் !