இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு!

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்ப தயாராக இருந்த சிறுவன், நிலநடுக்கத்தில் உயிரிழந்த தனது தாயை தேடி கதறி அழுதது மருத்துவமனையில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சியாஞ்சூர் நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.காணாமல் போன 151 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Previous articleகனடாவில் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்ற திட்டம்!
Next articleவியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் உயிரிழப்பு! மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (Video)