தனது மகளையே திருமணம் செய்த முதியவரால் ஏற்பட்ட பரபரப்பு !

முதியவர் ஒருவர் தனது சொந்த மகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று போலியானது என தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு 62 வயது முதியவர் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வீடியோ வைரலாக பரவியது.

இந்த வீடியோவில் முதியவர் ஒருவரும், இளம்பெண்ணும் மாலை அணிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ முதலில் டிசம்பர் 25 அன்று ட்ரோல் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது.

மேலும், இதே வீடியோ டெக்பரேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பரேஷ் சதாலியாவின் யூடியூப் பக்கத்திலும் உள்ளது.

அதுமட்டுமின்றி, டெக்பரேஷ் இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயதானவர் இளம் பெண்ணை திருமணம் செய்யும் வீடியோவும், வயதான பெண் ஒரு இளைஞனை திருமணம் செய்யும் வீடியோவும், இரண்டு பெண்கள் ஆணை திருமணம் செய்யும் வீடியோவும் உள்ளது.

இந்தப் பக்கத்தில் திருமணம் தொடர்பான வீடியோக்கள் நிறைய உள்ளன. இப்போது பகிரக்கூடிய வீடியோவில் உள்ள பெண்ணை மற்றொரு வீடியோவில் காணலாம்.

இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வதாக பதிவிட்டுள்ளனர். வீடியோக்களை வைரலாக்க திட்டமிடப்பட்ட ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என்று அறியலாம்.

முதியவர் ஒருவர் தனது சொந்த மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வீடியோ திட்டமிட்டு வைரலாக பரவியது தெரியவந்துள்ளது.

முதியவர் ஒருவர் தனது சொந்த மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வைரலான காணொளி போலியானது என்றும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதும் இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது.