மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் திடீர் மாற்றம்!

பொருளாதார மையமான தம்புள்ளையில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, சில்லறை விலையில் அவ்வாறான குறைப்பு இல்லை என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும் காய்கறிகள் அதிகளவில் கையிருப்பில் இருந்தும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்க வராத நிலை உள்ளது.

அத்துடன் பாரிய ஆலை உரிமையாளர்கள் அநியாயமாக அரிசியை கொள்வனவு செய்து அதிக இலாபம் ஈட்டுவதை அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன் 31/01/2023
Next articleஇலங்கைக்கு வருகை தந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!