நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் காலமானார்!

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால், உடலநல குறைவால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், மிகவும் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை

எனினும் இந்த வாழ்க்கை ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் என அவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ளது. பீட்டர் பால் ஒரு விஷுவல் எபெக்ட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதா youtube சேனல் ஒன்று துவங்குவதற்கு பீட்டர் பாலின் உதவியை தேடி சென்ற போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, அது திருமணத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகின்றது.

Previous articleவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!
Next articleஇலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் காலமானார்!