திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞன்

தமிழகத்தில் திருமணம் ஆகாத விக்ரதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவை எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தை கிராமத்தை சேர்ந்த 25 வயதான சுந்தரேசன் என்பவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த (13-06-2023) சுந்தரேசன் சொந்த ஊருக்கு வந்த பின்னர் தந்தையிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறி பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த சுந்தரேசன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உளுந்தூர்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.