தாய் இறந்த சோகத்திலும் பாடசாலைக்காக விளையாடிய மாணவன்

இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் தாய் உயிரிழந்த போதும் பாடசாலை அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கொழும்பு இசிபத்தன கல்லூரியை சேர்ந்த ஹேஷான் ரந்திமால் என்ற மாணவனே கல்லூரிக்காக இந் நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது.

கொழும்பு இசிபத்தன கல்லூரி அணிக்கும் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி நேற்றுமுன்திம் நடைபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஹேஷான் ரந்திமால் பங்கேற்ற இசிபத்தன கல்லுரி வெற்றி பெற்றுள்ளது.

போட்டி முடிவடைந்ததும் அணியின் சக மாணவர்களை ஹேஷானுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அனைவரும் இணைந்து அவரை அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மைதானத்திலிருந்து இருந்த ஏனைய மாணவர்களுக்கும் வேதனை அளித்திருந்தது.

எனினும் தாய் உயிரிழந்திருந்த போதும் கல்லூரியின் வெற்றிகாக விளையாடிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இசிபத்தன மற்றும் புனித சூசையப்பர் அணியின் வீரர்கள் ஹேஷானின் வீட்டுக்கு சென்று அவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.