ஒன்று திரளவுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன ஊழியர்கள்

லிட்ரோ நிறுவனமானது கடந்த 2015 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 50 பில்லியன் ரூபாவை இலாபம் மற்றும் வரிகளாக திறைசேரியில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லிட்ரோ சேமிப்பிற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

திரளவுள்ள அணி

இதன்படி திறைசேரிக்கு பெரும் பலமாக விளங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிறுவன ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து அதற்கு எதிராக அணி திரளவுள்ளதாக லிட்ரோ சேமிப்பு தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மறுசீரமைப்பதன் நோக்கம் தெளிவாக இல்லை எனவும், சரியான நேரத்தில் இல்லை எனவும் அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் சமூக-பொருளாதார நன்மைகளை அடைய முடியாது என்றும் லிட்ரோ பாதுகாப்பிற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் லிட்ரோ பாதுகாப்பிற்கான தேசிய ஒன்றியம் இதனை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.