சிறுநீரக அறுவைச் சிகிச்சை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல Keheliya Rambukwella கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (09-08-2023) நாடாளுமன்றத்தில் அமைச்சர் குறித்த கருத்து வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த குழந்தையிடமிருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையின் உறைநிலை குளிர்சாதன பெட்டியில் இருப்பதாக சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

“சிறுநீரகம் இன்னும் இருப்பதாகவும், உறைநிலை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இருப்பினும், இது தொடர்பான அறிக்கைகளை நான் சுகாதார அமைச்சிலிருந்து சமர்ப்பிப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன் 10.08.2023
Next articleநாட்டிற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!