நாட்டிலிருந்து வெளியேறும் 5000 மருத்துவர்கள்

வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான தகுதியுடைய 5000 மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையை தவிர்ப்பதற்காக அரசாங்கம் உடனடியாக முன்வரவேண்டும் என சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மருத்துவர்களில் 5000 பேர் வெளியேறுகின்றார்கள் என்றால் அது மிகப்பெரிய எண்ணிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை சுகாதார அமைச்சு ஆராயவேண்டும் அவர்கள் வெளியேறுவதை தடுப்பதற்கான திட்டத்தை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.