பிக்கு ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு!

மீகவத்தை நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று (21) கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

12 வயதுடைய பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிவெனாவில் பிக்கு இல்லாததால்இ தேடுதலின் போது கிணற்றில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார்

கிணற்றில் இருந்து மீட்கப்படும் போதும் அவர் உயிரிழந்திருந்தாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவானிலை தொடர்பான அறிவிப்பு!
Next articleமருந்தகத்தினால் வழங்கப்பட்ட தவறான மருந்தினை பயன்படுத்தியதால் பெண் உயிரிழந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை!