கோழி இறைச்சியின் விலை குறைவடையும் வாய்ப்பு!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன்
மேலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கும் அதே அனுகூலத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கோழி இறைச்சியின் வருடாந்த தனிநபர் நுகர்வு 11 கிலோவாகவும், முட்டையின் வருடாந்த தனிநபர் நுகர்வு 138 கிலோவாகவும் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.