இன்று முதல் QR முறை பின்பற்றப்பட மாட்டாது!

எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகம் செய்யப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பின்பற்றப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் நிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அவர் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு அறிவித்தார். 

கடந்த காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிய நிலையில் எரிபொருள் விநியோக வசதிக்காக QR முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. 

அந்த QR திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று அறிவித்தமைக்கிணங்க, இன்று  முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறை பின்பற்றப்படாது. 

Previous articleவட்டி வீதங்கள் தொடர்பில் வங்கிகளின் நிலை
Next articleமுதல் தானியங்கி மருத்துவ இயந்திரம் அறிமுகம்