வாகன விபத்தில் நால்வர் காயம்!

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

 இந்நிலையில்   மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் இரத்தினபுரியில் இருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி பயணித்து கொண்டிருந்த காரொன்று எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, மற்றும் பாதசாரி கடவையில் வீதியைக் கடப்பதற்கு முயற்சித்த பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.

மது போதையில்  விபத்து

பிறகு குறித்த கார் கடையொன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு கார் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அதில் பயணித்த அவரது சகோதரர், முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை மற்றும் மகன் பாதசாரி பெண் உட்பட அனைவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்dஉள்ளனர்.

சம்பவத்தில்   முச்சக்கரவண்டியில் பணித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 73 வயதுடைய கொலம்பகேயார பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

 விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில்  சந்தேகநபர் 30 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளராக கடமையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரில் மேலும் இருவர் பயணித்ததாக தெரிவித்த  பொலிஸார்,    மூவரும் விருந்தொன்றுக்கு சென்று அங்கு மதுபானம் அருந்தி உள்ளதாகவும் அதன் பின்னரே சந்தேகநபர் காரை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக  கூறியுள்ளனர்.  

மேலும் விபத்து தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.