online சட்டமூலம் தொடர்பான அறிவிப்பு!

சவாலுக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ச இன்று (07) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

எவ்வாறாயினும், சில சரத்துகள்  தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானத்தின் உத்தேச திருத்தங்களுக்கு உட்பட்டு, செயற் குழுவின் போது திருத்தப்பட்டால், இந்தச் சட்டத்தை பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உட்பட்டு,  சட்டமூலம் அல்லது அதன் விதிகள் எதுவும் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.