யாழில் பொலிசார் மீது தாக்குதல்!

 யாழ்ப்பாணம், சுழிபுரம் – பறாளாய் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை தேடிசென்ற பொலிஸார் மீது தாக்குதல நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நேற்று வெள்ளிக்கிழமை (17) வட்டுக்கோட்டை பொலிஸார் சிலர் குறித்த நபரை கைது செய்வதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது அங்கிருந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது .