பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்!

இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வாய்ப் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாய் மற்றும் உதட்டைச் சுற்றிய பகுதிகள் வெள்ளை நிறமாக மாற்றமடைந்தால் அது வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதியிடப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்து 

துரித உணவுகள் மற்றும் பொதியிடப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணியாற்றும் விசேட வைத்தியர் ஏ.எச்.பி.எஸ்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள், இது தொடர்பான ஆபத்தினை அறிந்து அதற்கு ஏற்றாற் போல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, தினமும் 5 தொடக்கம் 20 பேர் வரை இந்த நோய் பாதிப்புக்கு இலக்காகி சிகிச்சைப் பெற வருவதாகவும், எனவே அறிகுறிகள் தென்படுவோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.