வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!

கடந்த சில வாரங்களாக 600 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 300 முதல் 350 ரூபா வரை குறைந்துள்ளது.

பாகிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை ஏனைய மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.