தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இந்திய மத்திய இணை அமைச்சர்

பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்திருந்தார்.

பல்வேறுதரப்பினரும் கடும் கண்டனம்

அவரின் இந்த கருத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறுதரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு

இந்த நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,“எனது கருத்துக்கள் சிலருக்கு வலியை ஏற்படுத்தியதாக உணர்கிறேன். அதற்காக என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், எனது முந்தைய கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.